Thursday, 19 April 2012

எந்த நிலையிலும் மனரம்மியம்


நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
- பிலிப்பியர் - 4:11.


ஒரு மனிதனின் கையிலுள்ள கைக்கடிகாரம் ஓயாமல் இப்படி புலம்பிக்கொண்டே இருந்ததாம், 'ச்சே... என்னை இவர் மட்டும் தான் பார்க்கிறார். இவருக்கு மட்டும் தான் பயன்படுகிறேன். ஆனால் இந்த சுவரிலுள்ள கடிகாரத்தை பாரு... எல்லோரும் அதைத்தான் பாhக்கிறார்கள். நான் அதைப்போல் இல்லையே' என்று கவலைப்பட்டதாம். இதனுடைய புலம்பல் தாங்க முடியாமல், அம்மனிதர் 'நீர் சுவர் கடிகாரமாக இருக்கத்தானே ஆசைப்படுகிறாய் சரி உன்னை அது இருக்குமிடத்தில் மாட்டிவிடுகிறேன்' என்று சொல்லி சுவரில் கைகடிகாரத்தை மாட்டிவிட்டார். அந்தோ பரிதாபம்! அந்த கைகடிகாரத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. அது தான் ஆசைப்பட்டபடி உயரத்திற்கு சென்றுவிட்டது. ஆனால் யாருக்கும் பயன்படமுடியவில்லை. ஒரு பிரயோஜனமும் இல்லாமல் இருந்தது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நம் ஒவ்வொருவரையும் தகுதியான நிலைமையிலே, அவருடைய அநாதி சித்தததின்படி நம்மை மிகச்சிறந்த இடத்திலே வைததுள்ளார். ஆனால் நாம் நமக்குள்ள  மேன்மையை அறியாதபடி அவர்களை போன்று எனக்கு அது இல்லையே இது இல்லையே என்று புலம்புகிறோம். நமக்குள்ளதில் திருப்தி காணாமல் பிறரை போல வாழ ஆசைப்படுகிறோம்.

ஆனால் தேவன் நம் வாழ்விலே நமக்கென்று கொடுத்துள்ள கணவர், வேலை, சொத்து போன்றவை மிகமிக சிறந்ததே. தேவன் நம் வாழ்வில் சிறந்ததையே தந்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம். நமக்குரியதை பிறருக்குரியதோடு ஒப்பிட்டு மனம் சலித்து கொள்ள வேண்டாம். வீட்டிலே, வேலை ஸ்தலத்திலே தேவன் நமக்கு கொடுத்துள்ள ஸ்தானத்தில் மனரம்மியமாய் இருப்போம். நமக்கில்லாதவைகளை கண்டு ஏங்கி தவிக்காதபடி இருக்கிறவைகளுக்காக நன்றி சொல்ல தொடங்குவோம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடு இருக்கிறார்

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசிக்கிற நல்ல தேவனே, உம்மை துதிக்கிறோம். எங்களுக்கென்று உள்ளதை நாங்கள் மனரம்மியமாய் அனுபவிக்க கிருபை செய்யும். இருப்பதில் திருப்தி காண கிருபை செய்யும். மற்றவர்களை கண்டு அவர்களுடைய நிலையை கண்டு ஏக்கப்படாதபடி, உள்ளதிலே மகிழ்ச்சி அடைய கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென். 

1 comment:

  1. கடைசி நாட்களில் நடக்கும் அனா்த்தங்களும் தேவனுடைய வருகையின் நாட்களை வெளிப்படுத்தும் செய்திகளும், வேத விளக்கங்களிற்கும் நன்றி. தொடரட்டும் உங்கள் பணி! ஆண்டவா் தாமே உங்களை ஆசீா்வதிப்பாராக!

    ReplyDelete